Thursday, 16 October 2025

சிட்டுகள் தினம்

சின்னச்சின்னக் குருவிகளே!
சிறகடிக்கும் சிட்டுகளே!.
எண்ணங்கள் சிறகடித்து
எண்ணித் தினம் தேடுதே!..

வீடுகளில் கூடு கட்டி
விளையாடுஞ்சிட்டுகளே!
கிச்கிச்செனும் சின்னொலியும்
இரசிக்கத்தான் கேட்கலையே!

பாரதியை தேடித்தான்
பறந்தே யங்கும் சென்றீர்களோ !
யாரை நீங்கள்  ஊடியே
ஊரையுந் துறந்தீர்களோ !

சின்ன உங்கள் இதயங்கள்
மின்னலைகள் தாங்கலையோ!
எண்ண அலைகள் சேரலையோ!
என்னருமைச் சிட்டுகளே!

காலை மாலை கூடியே
காணத்தான் வருவீர்களோ !
உங்களுக்குத்  தானியமோ

உலர்ந்துதான் காய்கிறதே!

சிட்டு

சிறகடிக்கும் சிட்டுகள் எங்கே?
(சிட்டுகள் தினம்)

வானம் எங்கும் தேடுகிறேன்—உன்
கானம் எங்கே வாடுகிறேன்.
கீச்செனும் ஒலியைக் கேட்டிடவே.
கையில் நானுன்னை தொட்டிடவே.
வானம் எங்கும் தேடுகிறேன்உன்
கானம் எங்கே வாடுகிறேன்.
(வானம்)
சிறு சின்னம் வரைந்து பாடிட மனதில்
பாடல்கள் எனக்கும் போதவில்லை.
தினம் கூரையில் ஒலிக்கும் குரலில் இனிக்கும்
இனிமை சுகமோ மறக்கவில்லை.
எந்தன் சிறகுகள் விரித்து தேடும் கதி
எது தோணவில்லை ஒண்ணும் கூடவில்லை.
சின்ன நெஞ்சில் உன்போல் சேருதற்கோ
இங்கும் யாருமில்லை கண்டும் ஆகவில்லை..
(வானம்)
ஊருக்குள் மரங்கள் ஒழிந்ததுவோ!
கூரைகள் மறைந்தும் போனதுவோ!
கட்டிடம் பெருகி போக்கியதோ!
காந்தலை வீசி ஓட்டியதோ!
நீ கூடும் கூட்டம் பாடும் பாட்டும்
எனது நிம்மதி ஆனதது.   
சின்ன நெஞ்சில் உன்போல் சேருதற்கோ
இங்கும் யாருமில்லை கண்டும் ஆகவில்லை
(வானம்)
சிந் திய தானியம் யாருக்கிதோ
சிதறி வீணே கிடக்குதிங்கே.
அந்தியும் மாலையும் தேடியும் உன்னை
சிந்தைக்குள் எண்ணி ஏங்குறேனே.
சின்னச் சிட்டே கண்ணில் பட்டே தினம்
என்னைச் சேர்ந்தால் இன்பமடி.  
சின்ன நெஞ்சில் உன்போல் சேருதற்கோ
இங்கும் யாருமில்லை கண்டும் ஆகவில்லை
(வானம்)
கொ என் சிட்டுகள் எங்கே?
(சிட்டுகள் தினம்)

வானம் எங்கும் தேடுகிறேன்—உன்
கானம் எங்கே வாடுகிறேன்.
கீச்செனும் ஒலியைக் கேட்டிடவே.
கையில் நானுன்னை தொட்டிடவே.
வானம் எங்கும் தேடுகிறேன்—உன்
கானம் எங்கே வாடுகிறேன்.
(வானம்)
சிறு சின்னம் வரைந்து பாடிட மனதில்
பாடல்கள் எனக்கும் போதவில்லை.
தினம் கூரையில் ஒலிக்கும் குரலில் இனிக்கும்
இனிமை சுகமோ மறக்கவில்லை.
எந்தன் சிறகுகள் விரித்து தேடும் கதி
எது தோணவில்லை ஒண்ணும் கூடவில்லை.
சின்ன நெஞ்சில் உன்போல் சேருதற்கோ
இங்கும் யாருமில்லை கண்டும் ஆகவில்லை..
(வானம்)
ஊருக்குள் மரங்கள் ஒழிந்ததுவோ!
கூரைகள் மறைந்தும் போனதுவோ!
கட்டிடம் பெருகி போக்கியதோ!
காந்தலை வீசி ஓட்டியதோ!
நீ கூடும் கூட்டம் பாடும் பாட்டும்
எனது நிம்மதி ஆனதது.   
சின்ன நெஞ்சில் உன்போல் சேருதற்கோ
இங்கும் யாருமில்லை கண்டும் ஆகவில்லை
(வானம்)
சிந் திய தானியம் யாருக்கிதோ
சிதறி வீணே கிடக்குதிங்கே.
அந்தியும் மாலையும் தேடியும் உன்னை
சிந்தைக்குள் எண்ணி ஏங்குறேனே.
சின்னச் சிட்டே கண்ணில் பட்டே தினம்
என்னைச் சேர்ந்தால் இன்பமடி.  
சின்ன நெஞ்சில் உன்போல் சேருதற்கோ
இங்கும் யாருமில்லை கண்டும் ஆகவில்லை
(வானம்)
கவிஞர்.கொ.பெ.பிச்சையா.





.பெ.பி.அய்யா.





குருவிக் கூடு

குருவிக்கூட்டுக்குள்ளே குண்டு!

குருவிகளே குருவிகளே!எங்கே போறீங்கஉங்க
கூட்டுக்குயார் குண்டு வச்சான் நீங்க சொல்லுங்க.

பாடிக்கூடி வாழ்ந்த குருவிச்சாதி நீங்கங்ககூரை
தேடிக்கூடு கட்டிவாழ்ந்த வீடு எங்கெங்க?
ஒற்றுமையா வாழ்ந்தசாதி ஒன்று நீங்கங்க.
பற்றவைத்த பாவி எவன் நாசமாவாங்க!

காதலுக்கு சாதியென்ன நீதியில் லீங்க!--அந்தக்
கடவுளுக்கே பொறுக்காத பாவஞ்செஞ் ஜாங்க
மனசுகூடும் காதலையும் பிரிச்சு வைக் காங்க
இனந்திரிஞ்சு எரிமலைக வெடிக்க வைக்காங்க.

மனசுக்குத்தான் குண்டுவச்சு மடிஞ்சு போனாங்கஉங்க
இனத்தக்கூட விட்டு வைக்க இரக்கமில் லீங்க.
மருந்துக்குனு புடிச்சுப் புடிச்சு இனமழிக்காங்க.
பறந்துநீங்க இனம்தழைய மறைஞ்சி வாழுங்க.

அறமறியா மனுஷனுக்கு அறிவு இல்லீங்ககுருவி
அவசியமும் அவனறிஞ்சு புரிஞ்சுக்கொள் வாங்க/
புழுவினங்கள் பெருகிப்பயிர் அழிக்கும்பா ருங்க
அழுதுமனுசன் அப்பத்தான அறிஞ்சுபாப் பாங்க.

உமக்காகக் கூரைவீடு கட்டிவைப் பாங்கதேடி
உமைக்கூட்டி வந்துமே வாழவைப் பாங்க.
இனம்பகைக்கும் மனிதகுலம் திருந்தி வாழுங்க.
இளையதல முறையேனும் பொருந்தி வாழுங்க.

கவிஞர்.கொ.பெ.பிச்சையா





  

Monday, 17 February 2014

சின்னச்சிட்டுகள்

சின்னச்சின்னச்சிட்டுகளே!
.
சின்னச்சின்னச்சிட்டுகளே!
சிறகடிக்கும் பறவைகளே.
எண்ணங்கள் சிறகடித்து
எண்ணித்தினம் தேடுதே..

வீடுகளில் கூடு கட்டி
விளையாடுஞ்சிட்டுகளே!
கிச்கிச்செனும் சின்னொலியும்
இரசிக்கத்தான் கேட்கலையே!

பாரதியை தேடித்தான்
பறந்தங்கும் சென்றீர்களோ!
யாரிடம்தான் கோபமோ!
ஊரையேனோ மறந்தீர்களோ!!

சின்ன சின்ன இதயங்கள்
மின்னலைகள் தாங்கலையோ!
சிங்களராய் உம்மினத்தை
சிதைக்கத்தான் வந்தனவோ!

காலை மாலை கூடியே
காணத்தான் வருவீர்களோ!
உங்களுக்குத் தானியமோ
உலர்ந்துதான் காய்கிறதே!

கொ.பெ.பி.அய்யா.




சிட்டுக்குப் பெண் பிறந்தநாள்

சிட்டுக்குப்பெண் பிறந்தாள்,

சிட்டுக்குப்பெண் பிறந்தாள்,
சீமைக்கெல்லாம் சேதிவிட்டாள்.
பட்டுவிட்ட இனம் வாழ
பார்வதியே பிறந்தாளென்றாள்.

பேரும் வைக்க வேண்டுமென்றாள்
ஊருக்கெல்லாம் அழைப்பு வைத்தாள்.
பெண்ணரசி வீர்மங்கை
பெயர் சூட்ட வேண்டுமென்றாள்.

வாழைக்கும் சொன்னாளே!
வரவேற்பு செய்வதற்கு.
மாவிலையும் தேடினாள்.
தோரணங்கள் கட்டுதற்கு.

மயிலோட நாட்டியம்
மட்டுமல்ல கேளுங்கள்
குயிலோட பாட்டுந்தான்
கூடவே உண்டென்றாள்.

அலங்காரம் செய்வதற்கு
அன்னமே வருகுதென்றாள்.
கோலமிட்ட ஆடைநெய்து
கொண்டு வரும் வானமென்றாள்..

காரிருள் மையெழுத
கட்டாயம் வருமென்றாள்.
வானவில்லும் வருகுதென்றாள்
வண்ணங்கள் வளையல் கொண்டு.

சூரியன் வருகிறான்
சுட்டியொன்னு சூட்டியிட.
சந்திரனும் வருகிறான்
சந்தணத்தில் பொட்டுயிட.

மின்னலும் வந்திடும்
பொன்சரடும் தந்திடும்.
மேகமும் பந்தலிட்டு
முத்துமணி கோர்த்திடும்..

இடிமுழங்கி ஓசையுடன்
வெடிவெடிக்க வருகிறான்.
காற்றுங்கூட வருகிறான்
கால்க் கொலுசுந் தருகிறான்.

விண்மீன்கள் மலர் தூவும்.
பன்னீரை மழை தெளிக்கும்.
வான்குவிந்து குடைபிடிக்கும்.
வனங்குலுங்கி குலவையிடும்.

பழங்கொண்டு கிளிவரும்.
பால்கொண்டு பசுவரும்..
தென்னை இளநீருங் கொண்டு
பெண்சுமக்க ஆனை வரும்.

அவரவர்க்கு உகந்தபடி
அனைவருமே வந்திடுவர்.
அன்புடன் அழைக்கின்றாள்
அவசியமாய் வந்திடுவீர்.

பெண்ணாகப் பிறந்தவளை
பெருமை செய்யவேண்டுகிறேன்.
கண்ணாகப் போற்றுங்கள்
காலத்தின் தொடர்சசியவள்.

கொ.பெ.பி.அய்யா.




Sunday, 16 February 2014

சிட்டுக் குருவிகளா விட்டுப்பிரிவிகளா

இன்பம் தருவீகளா?

சிட்டுக் குருவிகளா என்னை
விட்டுப் பிரிவிகளா?
நத்தும் உறவுகளா என்னை
நாட மறப்பீகளா?

பட்டுச் சிறகுகளால் மெல்லத்
தட்டி எழுப்புவிகளா?
கத்தும் சிற்றொலியால் நல்ல
கானம் செய்வீகளா?

பட்ட உறவுகளை மீண்டும்
பாடித் திரிவீகளா?
கெட்ட சகுனங்களை தாண்டும்
கேண்மை வருவீகளா?

எட்டும் தூரமட்டும் அங்கும்
எடுத்துப் போவீகளா?
வெட்ட வெளியில் எங்கும்
சுற்றிக் காண்பீகளா?

சுட்டும் சுடர்விழிப் பாரதி
சொந்தச்சிட்டுகளா!
இட்டும் அவன்வழி பழகி
இன்பம் தருவீகளா?

தொட்டு நாளெல்லாம் எமக்கு
துணையாய் இருப்பீகளா?
கிட்டும் சொர்க்கமாம் இங்கே
கிளைத்து வாழ்வீகளா?


கொ.பெ.பி.அய்யா